Movie prime

சோகம்!! பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! 25 பேர் பலி!!

 
bud fire
மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூரில் இருந்து புனேவுக்கு 32 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்று நள்ளிரவில் புல்தானா பகுதியில்  உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.
bus fire accident
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது உரசி தடுப்புகளில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது. உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
suicide
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 7 பேரை மீட்டுள்ளனர். இந்த விபத்தில், 25 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மீட்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.