Movie prime

சோகம்!! கார் மோதி விபத்து!! 3 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி!!

 
school bag
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வலையம்பட்டியில் கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வலையம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
suicide
அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் தாறுமாறாக விரைந்து சென்ற கார் அவர்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 8 ஆம் வகுப்பு பயிலும் ரபீக், விஜய், சூர்யா ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
mortuary
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர் மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தாறுமாறாக காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.