Movie prime

சோகம்!! நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்!! 85 பேர் பரிதாப பலி!!

 
suicide
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த நிகழ்வு உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
yemen
ஏமன் நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அந்நாட்டு ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அதில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் கலந்து கொண்டனர்.
yemen charity
அதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 ஏழை மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வு சரியாக திட்டமிடப்படாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.