Movie prime

சோகம்!! 25 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவர் மரணம்!!

 
heart attack doctor
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவர், பாலாஜி நாராயணன். 25 வயதாகும் இவர் ரஸ்சியாவில் மருத்துவப் படிப்பு படித்து முடித்துள்ளார். மருத்துவம் படித்த பிறகு ஊருக்கு திரும்பிய இவர் கோவாவில் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
heart attack
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பாலாஜி நாராயணின் நண்பர் திலீப் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது 30 ஆவது நாள் துக்க நிகழ்வில் பங்கேற்க பாலாஜி நாராயணன் சென்னை வந்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கிய பாலாஜி நாராயணன் அங்கிருந்து நண்பரின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார்.

நிகழ்வு முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் சாலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
hospital
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவர் மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் துக்க நிகழ்வுக்கு வந்த இளம் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.