Movie prime

சோகம்!! ஹனிமூன் சென்றபோது புதுமண தம்பதி கடலில் மூழ்கி பலி!!

 
doctor couple

சேலம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ்வரன் மற்றும் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷ்னியா ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். மருத்துவர்களான இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜூன் 1 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், புதுமண தம்பதிகள் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு இன்பச் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.

poly island

அதன்படி, புதுமண தம்பதிகள் இருவரும் பாலி தீவுக்கு சென்று அங்கு சுற்றி பார்த்துள்ளனர். மேலும், சில இடங்களுக்கு சென்ற பின்னர் விரைவு மோட்டார் படகில் சாகசப் பயணம் மேற்கொள்ள விரும்பி படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வடகில் விபத்து ஏற்பட்டுள்ளது.
water death
இந்த விபத்தில் புதுமண தம்பதிகள் இருவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.