Movie prime

சோகம்!! பீதியில் மக்கள்!! மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!!

 
earthquake
நேற்று துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதி அன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து தற்போது தான் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது.
earthquake
கடந்த 6 ஆம் தேதி நடந்த பயங்கர நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,000 -ஐ கடந்த நிலையில், தற்போது தான் மீட்பு பணிகள் ஓரளவிற்கு முடிவடைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று பிப்ரவரி 20 ஆம் தேதி துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
earthquake
நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,000 -க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இருந்து தற்போது தான் படிப்படியாக மீண்டு வரும் சூழலில் தற்போது மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.