சோகம்!! கால்பந்து மைதானத்தில் பயங்கர வெடி விபத்து!! 40 பேர் பலி!!
Updated: Jun 11, 2023, 11:19 IST

சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியான ஷாபெல்லியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தில் இருந்த மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அந்த பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முதல்கட்டமாக கடந்த காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது வீசப்பட்டு மண்ணில் புதைந்து கிடந்த குண்டு, தற்போது வெடித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுயில் உள்ள ஒரு உணவகத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை நடத்தியுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த உணவகத்தில் இருந்து சுமார் 80 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.