சோகம்!! கண்டெய்னர் லாரி மீது மோதிய கார்!! 5 பேர் பலி!! கதறும் உறவினர்கள்!!
Feb 28, 2023, 09:32 IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் அருகே வட்டூர் பகுதியில் ரவி - கவிதா என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களது உறவினர்களான கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி மற்றும் கவிதாவின் தம்பி மகள் லக்சனா(4) ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். திருவிழா முடிந்த பின்னர் காரில் திருச்செங்கோடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை ரவி ஓட்டி வந்துள்ளார். பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் படமுடிபாளையம் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதி மீது கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தில் காருக்குள் இருந்த கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அப்பகுதியினர் காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவி, அவரது மனைவி கவிதா மற்றும் 4 வயது பெண் குழந்தை லக்சனா ஆகியோரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் கவிதா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 4 வயது குழந்தை லக்சனா, ரவி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாலை விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.