Movie prime

சோகம்!! துருக்கி - சிரியா நிலநடுக்கம்!! 4,300 பேர் பலி!! 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம்!!

 
earthquake
துருக்கி சிரியா நாடுகளின் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 4,300 நபர்கள் பலியாகி உள்ளனர்.நேற்று காலை மத்திய துருக்கி - சிரியா நாடுகளின் எல்லைப் பகுதியில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
earthquake
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் குலுங்கி சேதம் அடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மீட்பு மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் சிக்கி இதுவரை 4,300 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும், 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று என்று உலக சுகாதார மையம் அஞ்சுகிறது.
earthquake
நேற்று அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் தங்கள் சோகத்தை பகிர்ந்து வருவதோடு, தங்களால் முடிந்த உதவியை அந்நாடுகளுக்கு செய்ய தயாராக இருப்பதையும் தெரிவித்துள்ளனர்.