Movie prime

போக்குவரத்துத்துறை அமைச்சர் மரணம்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

 
santhan ram das
உத்தரகாண்ட் மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் சந்தன் ராம் தாஸ். 63 வயதாகும் இவர்  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
santhan ram das
இவரது மறைவு குறித்து அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாஸின் மறைவு செய்தியால் அதிர்ச்சியடைந்தேன் என்றும் அவரது மரணம் அரசியல் மற்றும் சமூக சேவைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் தெரிவித்துள்ளார். 2007 முதல் 4 முறை சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் அவர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சரானார் .
rip
அவரது மறைவிற்கு ஏப்ரல் 28 ஆம் தேதி வரை அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், வங்கிகள், கருவூலங்கள் மற்றும் துணை கருவூலங்கள் அனைத்தும் ஒரு நாள் மூடப்பட்டன. நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.