Movie prime

பயனர்கள் உற்சாகம்!! புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ள வாட்ஸ்அப்!!

 
whatsapp
வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி பயனர்களை மகிழ்விப்பது வழக்கம். அந்த வகையில், போன் நம்பர் பிரைவசி என்ற புதிய வசதி ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதி சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட்டை இன்ஸ்டால் செய்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்கள் என்று அனைவருக்கும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
whatsapp
இந்த வசதியின் மூலம் நீங்கள் இணைந்திருக்கும் கம்யூனிட்டியில் உங்களது அனுமதியின்றி மற்றவர்கள் யாரும் உங்களது வாட்ஸ்அப் எண்ணை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் சில மாதங்களுக்கு முன் கம்யூனிட்டி என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப் குரூப் போலவே இருக்கும் இந்த கம்யூனிட்டியில், ஒரே விதமான பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறது.
whatsapp
தற்போது, அறிமுகமாகி உள்ள போன் நம்பர் பிரைவசி என்ற புதிய வசதி மூலம் உங்களது கம்யூனிட்டியில் இருக்கும் யாரும் உங்களது அனுமதியின்றி உங்கள் வாட்ஸ்அப் நம்பரை பார்க்க முடியாது. மேலும், உங்களது கம்யூனிட்டியில் இருக்கும் யாருடைய நம்பரை நீங்கள் சேவ் செய்து வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டுமே உங்களது வாட்ஸ்அப் நம்பரை பார்க்க முடியும்.