Movie prime

தொண்டர்கள் அதிர்ச்சி!! எம்.பி. சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

 
mp cv shanmugam
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி. சி.வி.சண்முகம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற எம்.பி யாக தற்போது பதவி வகித்து வருகிறார். எம்.பி. சி.வி.சண்முகம் இதய சிகிச்சைக்காக நேற்று இரவு 8.45 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
mp cv shanmugam
எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எம்.பி.சி.வி.சண்முகத்தின் உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
mp cv shanmugam
கடந்த 2 நாட்களுக்கு முன் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டார். அதன் பிறகு திமுக மீது பல்வேறு தொடர் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.