Movie prime

எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை!!

 
rain
இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று  இணைகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
rain
தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் அதிகரித்து வரும் காரணமாக வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், சில இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சரிந்து விழுந்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் சில இடங்களில் பெய்துள்ளது.
rain
இந்நிலையில், இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று  இணைவதால் 23 ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.