Movie prime

உலக புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி காலமானார்!!

 
john goodenough
நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி ஜான்குட் எனஃப் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். 100 வயதாகும் ஜான்குட் எனஃப் 1922 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்தவர் ஜான்குட் எனஃப்.
john goodenough
லித்தியம் - அயன் பேட்டரி உருவாக்கப்படும் முன்னர் வரை நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரியை நம்பிதான் உலகம் இருந்தது. நிக்கல்-ஹைட்ரஜன் வகை பேட்டரிகளை பயன்படுத்த தொடங்கிய சில நாட்களிலேயே  சேமிப்பு திறனில் 50 சதவிகிதத்தை இழந்து விடும். அந்த சூழலில் தான் ஜான் குட் எனஃப் லித்தியம் - அயன் பேட்டரி உலகில் மிகப்பெரிய சாதனையை செய்து காட்டினார்.
rip
இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 97 ஆவது வயதில் லித்தியம்-அயன் பேட்டரி பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர். இந்நிலையில், இவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.