Movie prime

இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா!! முதலமைச்சர், தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு!!

 
chess
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. 44 ஆவது சர்வதேச செஸ் போட்டிகள் கடந்த மாதம் 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த போட்டி இன்று நிறைவடைகிறது.
chess
இந்த போட்டியில், பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். இந்த போட்டிகளின் நிறைவு விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (9 ஆம் தேதி) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
nehru stadium
இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், தோணி, விஸ்வநாத ஆனந்த போன்றவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்த விழாவின் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
dhoni, stalin
இன்று மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈ.வெ.ரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.