Movie prime

காமன்வெல்த் போட்டிகள் துவக்க விழா!! கம்பீரமாக தேசிய கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, மன்பிரீத் சிங்!!

 
common wealth
காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28 ஆம் தேதி நேற்று இங்கிலாந்து பர்மிங்காமில் துவங்கின. இதில் இந்திய தேசியக் கொடியை கம்பீரமாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஏந்திச் சென்றனர்.
cw
இந்த காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 72 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இது இந்தியாவின் 18 ஆவது காமன்வெல்த் போட்டியாக அமையும்.
cw
106 ஆண் விளையாட்டு வீரர்களும், 104 பெண் விளையாட்டு வீராங்கனைகளுமாக மொத்தம் 210 இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்திய வீரர்கள் மொத்தம் 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.