Movie prime

பெருமை!! உலக துப்பாக்கி சுடுதலில் அசத்தியுள்ள தமிழக வீரர்!!

 
prithviraj thondaiman
ISSF சார்ட்கன் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ள தமிழக வீரர் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் தொண்டைமானின் மகன் ப்ரித்விராஜ் தொண்டைமான்(35).
prithviraj thondaiman
ப்ரித்விராஜ் தொண்டைமான் ஒரு துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர். கத்தார், தோஹாவில் நடைபெற்ற ISSF சார்ட்கன் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இவர் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் வென்ற பதக்கம் ISSF சார்ட்கன் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கமாகும்.
prithviraj thondaiman
பல்வேறு சுற்றுகள் நடந்த இந்த போட்டியில், 20/25 என்ற புள்ளிகளை பெற்று ISSF சார்ட்கன் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை பெற்று நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார், ப்ரித்விராஜ் தொண்டைமான்.