Movie prime

அதிர்ச்சி!! பிரபல கிரிக்கெட் வீரர் சிறுநீரக கோளாறு காரணமாக காலமானார்!!

 
abdul azeem
முன்னாள் ஹைதராபாத் அணி கிரிக்கெட் வீரரும், உள்நாட்டு வட்டத்தில் சிறந்த தொடக்க வீரருமான அப்துல் அசீம் நேற்று காலமானார். அவர் சில காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். 62 வயதாகும் அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
abdul azeem
80 மற்றும் 90களில் ஆரம்ப ஆட்டக்காரர்களில் ஒருவராக சிறந்து விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், அசீம் 1986 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் தமிழகத்திற்கு எதிராக விடிய ஆட்டத்தில் மூன்று சதத்தைப் பெற்றார். இந்நிலையில், கடந்த சில காலமாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதனால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
abdul azeem
இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன், முன்னாள் டெஸ்ட் நட்சத்திரங்கள் அர்ஷத் அயூப் போன்ற பல கிரிக்கெட் பிரபலங்கள் தங்கள் இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.