அதிர்ச்சி!! உமேஷ் யாதவ் தந்தை காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ் யாதவ். இவரின் தந்தை, திலக் யாதவ்(74). கடந்த சில மாதங்களாகவே திலக் யாதவ் உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். இதனால், நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை சீராக இருந்ததால் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். நேற்று முன்தினம் மாலை எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்தார்.
இவருடைய திடீர் மறைவு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். திலக் யாதவின் இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் நேற்று நடைபெற்றது .
உத்தரபிரதேச மாநிலம், பத்ருனா மாவட்டத்தில் உள்ள போகர்பிந்தா கிராமத்தில் திலக் யாதவ் வசித்து வந்தார். இவர் தன்னுடைய இளமை காலத்தில் பிரபலமான மல்யுத்த வீரராக இருந்துள்ளார். திலக் யாதவுக்கு கமலேஷ், கிரிக்கெட் வீரர் உமேஷ், ரமேஷ் என்று மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்.
உமேஷ் யாதவ் 35 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்துள்ளார். இதுவரை, அவர் இந்தியாவுக்காக 54 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உமேஷ் யாதவ் இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் 164 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேச போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட BGT தொடருக்கான இந்திய அணியில் உமேஷ் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.