Movie prime

சோகம்!! கபடி போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இளைஞர்!!

 
kabadi death
தற்போதைய காலத்தில் யாருக்கு எப்போது மாரடைப்பு ஏற்படுகிறது என்றே தெரியவில்லை. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், வயதானவர்கள் என வயது வித்தியாசமில்லாமல் அனைத்து வயதினருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது.
heart attack
உடற்பயிற்சி செய்யும் போது, விளையாடும் போது, உறங்கும் போது என்று பல்வேறு சூழலில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். அந்த வகையில், நேற்று கபடி போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
suicide
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குபிள்ளையூரில் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற மாணிக்கம் என்ற இளைஞருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.